உயிரைக் குடிக்கும் மினரல் நீர்!!!

257
Advertisement

தாயை பலித்தாலும் தண்ணீரை பலிக்கக்கூடாது என்று ஒரு பழமொழி உண்டு,ஆனால் நாம் தண்ணீரை பல வகையில் உதாசீன  படுத்தியதால் அதனை காசுசெலவழித்து வாங்கவேண்டிய கட்டாயத்தில் கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்நிலையில் தான் தூய்மையான தண்ணீர் கிடைக்காததால் அனைவரும் தூய்மையான தண்ணீர் என்று நினைத்து மினரல் நீரை காசுகொடுத்து வாங்கி பருகுகிறோம்.ஆனால் நாம் நல்லதென்று நினைத்து குடிக்கும் அந்த மினரல் நீர் எத்துணை தீமையை நம் உடம்பிற்கு தருகிறது என்று என்றைக்காவது சிந்தித்திருக்கிறீர்களா?

இந்த நீரை முதலில் மினரல் நீர் என்றே கூறக்கூடாது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் ஏன் என்றால் நீரை கடலில் இருந்தோ,ஆழ்குழாய் தண்ணீரையோ பயன்படுத்துகிறார்கள் இதுமட்டுமால்லாமல் அதனை சுத்திகரித்து கேன்களில் அடைப்பார்கள்.

இவ்வாறு நீர் அடைக்கப்படும் அந்த கேன்களை 6 மாதத்திற்க்கு ஒரு முறையாவது மாற்ற வேண்டும் ஆனால் அவ்வாறு செய்யாமல் அதனை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் மாற்றுகிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.

நாள்பட்ட அந்த கேன்களில் தண்ணீரை அடைக்கும்பொழுது பாக்டீரியாக்கள் உருவாகுகிறது அதுமட்டுமல்லாமல் தூய்மையற்ற இடத்தில் தண்ணீரை சுத்திகரிக்கும்பொழுது பாக்டீரியா பரவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.இப்படி பட்ட கேன்களில் தண்ணீரை நிரப்பும்பொழுது சில நாட்களிலேயே அந்த கேனிற்கு அடிப்பகுதியில் பாசான் பிடித்துவிடும் அடுத்த சில நாட்களில் புலி பூச்சிகள் பிடித்துவிடும் இப்படிப்பட்ட தண்ணீரை தான் மக்கள் பெரும்பாலும் குடிக்கிறார்கள்.

இதனை குடிப்பதால் சுவாச புற்றுநோய்,எலும்பு நோய்,வயிற்று போக்கு,சிறுநீரக நோய்,தோல் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படுகிறது.ஒரு லிட்டர் தண்ணீரில் உப்புக்கள்கரைந்துள்ள குறைந்த பட்சம் 500 மில்லி கிராம் இருக்குமா அதிலிருந்து நமக்கு தேவையான கால்சியம் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கிறது ஆனால் சுத்திகரிக்கப்படும் தண்ணீரிலிருக்கும் உப்பின் அளவு வெறும் 10 மில்லி கிராம் மட்டுமே ஆகும் இதனால் உடம்பு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் நோய்வாய் ஏற்படுகிறது.

எனவே தண்ணீர் தானே என்று எந்த நீரையும் பரிசோதிக்காமல் குடிக்காதீர்கள்.