பாசிப் பயிரின் பலவித பயன்கள்

42
Advertisement

சாதாரணமாக கடைகளில் கிடைக்க கூடிய பாசிப் பயிரின் பலன்களை அனைவரும் அறிந்து கொண்டால் அதன் விலை ஏறி விடுமோ என்னவோ, என அதில் நிறைந்துள்ள மருத்துவ பயன்களை பற்றி கேள்விப்படுகையில் நினைக்க தோன்றுகிறது.

பருப்பு வகைகளிலேயே எளிதாக செரிமானம் ஆக கூடியதாக பார்க்கப்படும் பாசிப் பருப்பு, பருப்புகளின் ராணி என அழைக்கப்படுகிறது.

இரும்பு சத்து, பொட்டாசியம் மற்றும் ஆண்டி ஆக்ஸிசன்ட்ஸ் அதிகம் உள்ள பாசிப் பருப்பை உணவில் சேர்த்து கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறைகிறது.

Advertisement

மேலும், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

Folate சத்து மிகுதியாக உள்ள பாசிப் பருப்பு கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த ஊட்டச்சத்து உணவாக அமைகிறது. அது மட்டுமில்லாமல், பாசிப் பயிரை பொடியாக்கி முகத்துக்கு facepack போல போடும் போது, சரும பிரச்சினைகள் நீங்கி முகப் பொலிவு கூடுகிறது.

உடல்நலக் குறைவின் போது மற்ற உணவுகளை சாப்பிட முடியவில்லை என்றாலும், பாசிப் பயிரை சூப் போல வைத்து குடித்தால் உடலுக்கு தேவையான சக்தி கிடைப்பதாக கூறும் ஆயுர்வேத மருத்துவர்கள், பல நற்பலன்கள் கொண்ட பாசிப்பயிரை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.