உடல் நலனை சீராக பராமரிப்பதற்கும் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கும் உடனடி மருந்து ஏதும் இல்லை. நாம், நாள்தோறும் பின்பற்றும் வாழ்க்கை முறையால் மட்டுமே வலுவான உடல் கட்டமைப்பு சாத்தியப்படுகிறது.
பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற உலர்ந்த கொட்டைகளில் நம் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் நிறைந்திருப்பது, அனைவரும் அறிந்ததே.
எனினும், குறிப்பாக பாதாமை இரவு தண்ணீரில் ஊறவைத்து பகலில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் அடுக்கடுக்கான நன்மைகளை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஊறவைத்த பாதாம் எளிதாக செரிமானம் ஆகும் தன்மை கொண்டது. அதனால், உடலுக்கு தேவையான சத்துக்களை உள்வாங்க உதவுவதோடு, உடலில் உள்ள கொழுப்பை குறைக்கவும் செய்கிறது.
நான்கில் இருந்து ஐந்து பாதாம் சாப்பிடுவதால் வயிற்றை சுற்றி உள்ள எடை குறைய வாய்ப்புள்ளது.
பாதாமில் உள்ள விட்டமின் E, மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைப்பதோடு, சருமத்தை பொலிவுடன் விளங்க வைக்கிறது.
மேலும், ஊறவைத்த பாதாமை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது, சக்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் என கூறும் மருத்துவர்கள், நட்ஸ் வகைகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தன்மை இருப்பதால், அவற்றை பற்றி தெளிவாக தெரிந்து கொண்டு உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.