கடற்கரையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வெளிநாட்டு பெண்

257

கோவா மாநிலத்தில் உள்ள கடற்கரைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், பிரிட்டனை சேர்ந்த பெண், தனது கணவருடன் கடந்த 2ஆம் தேதி கோவாவில் உள்ள அரம்பொல் கடற்கரையின் ஸ்வீட் லேக் பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது கடற்கரையில் தனியாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்த, பிரிட்டன் பெண்ணை அடையாளம் தெரியாத நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கோவாவை சேர்ந்த நபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.