காய்ச்சல் சீக்கிரம் சரியாக சாப்பிட வேண்டிய உணவுகள்!

334
Advertisement

கால சூழ்நிலை மாறும் போது எளிதாக தாக்கும் காய்ச்சலில் இருந்து விடுபட மருந்து மாத்திரை எடுத்து கொள்வது மட்டுமில்லாமல் சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

காய்ச்சலின் போது உடலின் ஜீரண சக்தி குறைவாக இருக்கும். அதனால் எண்ணெயில் பொறித்த, சக்கரை மிகுந்த மற்றும் cream போன்ற அடர்த்தியான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

சிக்கன் சூப் போன்ற ஊட்டச்சத்து மிக்க திரவ உணவுகளை சூடாக எடுத்துக்கொள்வது உடலை அமைதிப்படுத்த உதவுவதோடு, சூப்பில் உள்ள புரதம் நோயை எதிர்த்து போராட வேண்டிய ஆற்றலை அளிக்கும்.

B6 மற்றும் B12 விட்டமின்கள் நிறைந்துள்ள முட்டையை வேக வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக அதிகரிப்பதோடு உடற்சோர்வு நீங்கும்.

காய்கறிகளுடன் சேர்த்து செய்யப்படும் கிச்சடி எளிமையாக செரிமானம் ஆகக்கூடிய ஊட்டம் தரும் உணவாகும். அரிசி சாதத்தை கஞ்சி போலக் காய்ச்சி சாப்பிட்டால் சீக்கிரம் ஜீரணம் ஆவதோடு, உடல் இழந்த நீர்ச்சத்துக்களை மீட்டெடுக்க உதவும்.

மிளகுத் தூள் மற்றும் கிராம்பு தூள் சேர்த்து சமைக்கப்படும் வேகவைத்த உருளைக்கிழங்கு சளி மற்றும் ஜலதோஷத்தில் இருந்து நிவாரணம் பெற உதவும்.

Bread சாப்பிடுவதாக இருந்தால் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படாமல் இருக்க பாலில் தொட்டு அல்லது வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

சாதாரண தேநீருக்கு பதிலாக துளசி, கற்பூரவல்லி, இஞ்சி போன்றவை சேர்ந்த தேநீர் குடிப்பது சிறப்பான பலன்களை தரும். உடலில் குறையும் நீர்ச்சத்தை சரி செய்ய விட்டமின் சி நிறைந்த சாத்துக்குடி பழச்சாறு பருகுவது நல்லது.

ஆனால், இனிப்பாக மற்றும் குளிர்ச்சியாக இல்லாமல் பருகிவிட்டு மீதி நேரங்களில் வெதுவெதுப்பான நீரை பருகி வருவது, நல்ல ஓய்வு எடுத்துக்கொள்வது, கைகளை சோப்பு போட்டு கழுவுவது ஆகியவற்றை கடைபிடித்தால் காய்ச்சலில் இருந்து விரைவில் மீண்டு வரலாம் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.