இளமை காலத்தில் நிதி நெருக்கடியால் கடும் அவதியடைந்ததாக டுவிட்டார் நிறுவனர் எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க்குக்கு ஆப்பிரிக்காவில் மரக சுரங்கம் இருப்பதாகவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்தே டெஸ்லா – ஸ்பேஸ் – எக்ஸ் போன்ற நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகின. இதற்கு விளக்கமளித்த எலான் மஸ்க், இளமை காலத்தில் நிதி நெருக்கடியால் கடும் அவதியடைந்ததாகவும் தனக்கு பரம்பரை சொத்து எதுவும் கிடைக்கவில்லை என்றும், வியாபாரத்தில் நஷ்டமடைந்த தனது தந்தைக்கு 25 ஆண்டுகளாக பண உதவி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதான் AI போட்கள் வாக்களிப்பதை தடுப்பதற்கான ஒரே யதார்த்தமான வழி. இல்லையெனில், வாக்கெடுப்பில் நம்பிக்கைத் தன்மை என்பது இருக்காது என்று கூறியுள்ளார். பொதுவாக எலான் மஸ்கின் டுவிட்டர் அறிவிப்புகள் அனைத்தும் விந்தையாகவே பார்க்கப்படுகிறது. சில அறிவிப்புகள் டுவிட்டரின் கொள்கையாகவோ அம்சங்களாகவோ மாறாமல் அப்படியே நிலுவையில் உள்ளன. இதற்கு முன்பு கடந்த டுவிட்டர் நிறுவனம் ப்ளூ சந்தாதாரர்களுடன் விளம்பர வருவாயைப் பகிரப் போகிறது என்று எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.
பிப்ரவரி மாதம் இந்த அறிவிப்பை வெளியிட்டார், ஆனால் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகும் அவை செயல்பாட்டுக்கு வரவில்லை. அதே போல், மார்ச் 5 ஆம் தேதிக்குள் டுவிட்டர் நிறுவனத்தின் அல்காரிதத்தை ஓப்பன் சோர்ஸ் செய்வதாகவும் அவர் உறுதியளித்தார், அதுவும் நடக்கவில்லை.
இருப்பினும் ப்ளூ டிக் சம்பந்தமான அறிவிப்புகள் உடனுக்குடன் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதாவது, டுவிட்டருக்கு லாபம் கிடைக்கின்ற கட்டண சந்தா, கட்டண சந்தா திட்டங்கள் மட்டும் முழுவீச்சில் செயல்பாட்டுக்கு வருகிறது. அதே போன்று தற்போது வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெற வேண்டும் என்று எலான் மஸ்க் நிர்பந்தம் விதிப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.