காங்கிரஸை பின்னுக்கு தள்ளிய பாஜக வேட்பாளர்கள்

310

மாநிலங்களவை தேர்தலில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் புகார் எழுந்ததையடுத்து தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இன்று காலையில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதன்படி. மகாராஷ்டிரா மாநிலத்தில், மொத்தமுள்ள 6 இடங்களில் பாஜக 3 இடங்களை கைப்பற்றியுள்ளது.

காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளின் சார்பாக தலா 1 வேட்பாளர் வெற்றி பெற்றனர்.

ஹரியானாவில் பாஜக ஒரு இடத்திலும் சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர்.

இதன்படி, தேர்தல் நடைபெற்ற 16 மாநிலங்களவை எம்.பி. பதவிகளில், பாஜக வேட்பாளர்கள் 9-பேர் வெற்றி பெற்றனர்.

ராஜஸ்தானில் 3, கர்நாடகா, மகாராஷ்டிராவில் தலா1 இடத்திலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

இதன்படி மொத்தமாக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.