வாழைப் பழத் தேநீர் பருக வாங்க…

352
Advertisement

அநேகம் பேருக்கு தேநீர் பருகினால்தான் காலையில் துயில் கலையும்;
உற்சாகம் பிறக்கும். ஆனால், இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள்
வாழைப் பழத் தேநீர் பருகினால் ஆழ்ந்த உறக்கம் வரும்.

பல நாடுகளில் இரவு உணவாக வாழைப் பழ டீ பருகப்படுகிறது.

வாழைப் பழத்துக்கும் மனிதர்களின் உறக்கத்துக்கும் தொடர்புள்ளது.
வாழைப்பழத்தில் ட்ரிப்டோன் என்னும் அமினோ அமிலம் உள்ளது.
இது மனித மூளையில் செரோடோனின் என்னும் வேதிப்பொருளை
உற்பத்தி செய்கிறது.

இது மன சோர்வு, கவலைகளைக் குறைத்து அமைதியான, ஆழ்ந்த தூக்கத்தை
வரவழைக்கும்.

வாழைப்பழத் தேநீர் எப்படித் தயாரிப்பது?

ஒரு நல்ல நாட்டு வாழைப்பழமும் சிறிது லவங்கப்பட்டையும் போதும்
வாழைப்பழ டீ தயார் செய்வதற்கு.

வாழைப்பழத்துடன் சிறிதளவு லவங்கப்பட்டையும்
6 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து,
தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை கலந்து 10 நிமிடம்
கொதிக்க வையுங்கள்.

பிறகு, வடிகட்டி பனானா டீ பருகுங்கள்… அவ்வளவுதான்…
கொட்டாவி வரத் தொடங்கும். தூக்கம் உங்கள் கண்களைத் தழுவும்….

இரவில் சரியான தூக்கம் இல்லையெனில் ஆரோக்கியம் கெடும்.
மனம் ஒருமுகப்படாது. இனி, அந்தக் கவலை தேவையில்லை.