Wednesday, December 4, 2024

தொப்பை குறைய இந்த பழத்தை சாப்பிடுங்க போதும்!

உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் அதனுடன் சேர்த்து சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்வது அவசியம்.

அப்படி, உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு உறுதுணையாக செயல்படுவதில் டிராகன் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. விட்டமின் C, கரோடினாய்ட்ஸ், Anti Oxidants நிறைந்துள்ள டிராகன் பழம் இதய நோய் பாதிக்கும் வாய்ப்புகளை குறைப்பதோடு கேன்சர் செல்களின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.

கலோரிகள் குறைவான இந்த பழத்தில் உடலுக்கு தினசரி தேவைப்படும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. செரிமானக்கோளாறு, மலச்சிக்கல் போன்ற உபாதைகளை தீர்ப்பதில் நார்ச்சத்து சிறப்பாக செயல்பட்டு உடல் எடை குறைப்புக்கு சாதகமான சூழலை உருவாக்குகிறது. டிராகன் பழத்தை சாப்பிட்டால் பசி நீங்கி முழுமையான உணர்வு ஏற்படுவதால் இடையிடையே தேவையற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதற்கான அவசியம் இல்லாமற் போகிறது.

வெள்ளை இரத்த அணுக்களை பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் தன்மை கொண்டது டிராகன் பழம். உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் டிராகன் பழத்தை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் உடல் எடை குறைவதோடு சிறப்பான ஊட்டச்சத்துக்களையும் பெற முடியும் என உணவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!