வேகமா எடை குறைக்காதீங்க! சீக்கிரமே குண்டாகிடுவீங்க…

213
Advertisement

உடல் எடையை குறைக்க வேண்டி டயட், ஜிம் என எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும் நாம் எதிர்ப்பார்ப்பது உடனடி ரிசல்டைதான்.

ஒரு மாதத்தில் 10 கிலோ குறைத்துவிட்டேன் என சொல்வதில் அலாதி இன்பமும் பெருமிதமும் நமக்கு இருக்கும். ஆனால் மெதுவான நிலையான எடை குறைப்பையே நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதி விரைவான எடை குறைப்பு சீக்கிரமே உடல் எடை போடவும் வழிவகுக்கும் என கூறுகின்றனர்.

பொதுவாக ஒவ்வொரு வாரமும் 0.5 முதல் 1 கிலோ கிராம் வரை எடை குறைப்பதையே ஆரோக்கியமானதாக நிபுனர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இதனைத் தாண்டி அதிகமாக எடையை குறைப்பவர்கள் அடுத்த சில நாட்கள் டயட்டையும் உடற்பயிற்சியையும் கடைபிடிக்காத பட்சத்தில் மீண்டும் அசுர வேகத்தில் எடை போடுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. மெதுவான எடை குறைப்பிலும் இந்த சிக்கல்கள் இருந்தாலும் அதற்கான கால இடைவேளை அதிகமாக இருப்பதையும் மருத்துவர்கள் நிறுவுகின்றனர்.