இனி “ஆண்ட்டி”னு கூப்பிடக்கூடாது கடையில் போர்டு வைத்த  உரிமையாளர்

458
Advertisement

பொதுவாக ஒரு கடைக்கு சென்றால் அங்கு இருக்கும் உரிமையாளரோ அல்லது வேலை செய்பவரோ  அவர்கள் மூத்தவர்களாக இருந்தால் , அவர்களை  “uncle” அல்லது  “auntie” என்று அழைப்பது வழக்கமான ஒன்று.

இந்நிலையில் , சீனாவின் தைவானில் உள்ள ஓர்  உணவகத்தில் உணவு ஆர்டர் செய்யும்போது  தன்னை “ஆண்ட்டி” என்று கூப்பிடக்கூடாது என எச்சரிக்கை போர்டு வைத்துள்ளார் அதன் உரிமையாளர் பெண்மணி.

சமீபத்தில் தைவான் சோங்லி மாவட்டத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு காலை சிற்றுண்டி சாப்பிடுவதற்கு சென்றுள்ளார் ஒரு நபர்.பின் ,தனக்கு தேவையான உணவை  ஆர்டர் செய்யும் அந்த நபர்,கடை உரிமையாளரை பார்த்து “ஆண்ட்டி இதை எனக்கு கொண்டுவாங்க” என கூறியுள்ளார்.

கடுப்பான உரிமையாளர் அவருக்கு உணவளிக்க மறுத்துவிட்டார்.ஏன் என அந்த நபர் புரியாமல் கேட்க,கடையின் வெளியில் மற்றும் உள்புறத்தில் ஒட்டப்பட்டுரும் அறிவிப்பை காட்டியுள்ளார்.அதை பார்த்து புரிந்துகொண்ட அந்த நபர்,  “அழகான பெண் முதலாளியே ,எனக்கு என் ஆர்டரை கொண்டுவாருங்கள் என கேட்டுக்கொண்ட பின்பு தான் அவருக்கு உணவு வழங்கப்பட்டது.

இதை அந்த நபர், அங்கு ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பை   புகைப்படத்துடன் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.பலரும் அந்த  கடை உரிமையாளருக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.