கெட்டதுன்னு நினச்சு மொத்தமா தவிர்க்காதீங்க! வெள்ளை சாதத்தின் வேற லெவல் நன்மைகள்…

121
Advertisement

உடல் எடை குறைப்பவர்கள், சக்கரை நோயாளிகள் மற்றும் ஆரோக்கியமாக உணவு சாப்பிட வேண்டும் என நினைப்பவர்கள் பலரும் வெள்ளை சாதத்தை அறவே ஒதுக்கி விடுகின்றனர்.

ஆனால், உலகம் முழுவதும் பல நாடுகளில் அடிப்படை உணவாக உள்ள வெள்ளை சாதத்தில் அவ்வளவு தீமை இருக்கின்றதா என்பது கேள்விக்குறியே.

அளவாக வெள்ளை சாதம் சாப்பிடும் போது உடலுக்கு கிடைக்கும் பயன்களை இந்தப் பதிவில் பார்ப்போம். கார்போஹைட்ரேட்ஸ் அதிகமாக உள்ள வெள்ளை சாதம் உடலுக்கு தேவையான எனர்ஜியை உடனே தரக் கூடியது. சாதம் எளிதில் செரிமானம் ஆகக் கூடியது என்பதால் வயிற்றுக் கோளாறுகளால் அவதிப்படுபவர்களும் காய்ச்சல் போன்ற உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களும் சாப்பிட ஏற்ற உணவாக உள்ளது.

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க பழுப்பு அரிசி சிறந்த தேர்வாக பார்க்கப்பட்டாலும் வெள்ளை சாதத்தை அளவாக உட்கொள்வதும் பாதுகாப்பாகவே கருதப்படுகிறது. குறைந்த கலோரிகள் கொண்ட புழுங்கல் அரிசி சாதம் உடல் எடை குறைப்பவர்களும் சாப்பிட உகந்த அரிசியாக உள்ளது. விட்டமின் D, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த சாதம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

சாதத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் வயது மூப்பை தூண்டும் free radicalsஇன் வளர்ச்சியை குறைப்பதுமின்றி, நாள்பட்ட நோய்கள் தாக்கும் வாய்ப்பையும் கணிசமாக குறைப்பதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது. சீரான தூக்கம், முறையான உடற்பயிற்சியுடன் சரிவிகித உணவின் ஒரு பகுதியாக வெள்ளை சாதத்தை அளவுடன் எடுத்துக் கொள்ளலாம் என்பதே உணவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.