மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை வழங்க மத்திய அரசிடம் ஆயிரத்து 500 கோடி இல்லையா? – ராகுல் காந்தி கேள்வி

182

மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை வழங்க மத்திய அரசிடம் ஆயிரத்து 500 கோடி இல்லையா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், விளம்பரத்திற்காக 911 கோடி செலவு, புதிய விமானத்திற்கு 8 ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவு, முதலாளி நண்பர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி வரி விலக்கு அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், முதியோர்களுக்கு ரயில் பயணத்தில் சலுகை வழங்கிட அரசிடம் ஆயிரத்து 500 கோடி இல்லையா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நண்பர்களுக்காக நட்சத்திரங்களை கூட உடைப்பார், ஆனால் ஒவ்வொரு பைசாவிற்கும் மக்களை ஏங்க விடுவார் என்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.