விதியை மீறிய பயணம் – தடுத்து நிறுத்திய போலீசாரை தாக்கிய அதிர்ச்சி சம்பவம்

34

டெல்லியில் நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் ஆண் நண்பருடன் 2 இளம்பெண்கள் பயணித்துள்ளனர்.

3 பேர் பயணித்த அந்த இருசக்கர வாகனம், தவறான பாதையில் சென்றுள்ளது.

இதனையடுத்து போலீசார், இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.

Advertisement

அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 2 பெண்களும், தனது ஆண் நண்பருடன் சேர்ந்து போலீசாரை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

டெல்லி ஹசுரி ஹாஸ் பகுதியில் வீட்டுப்பாடம் செய்யாத 5 வயது குழந்தையை, கை-கால்களை கட்டிப்போட்டு, உச்சிவெயிலில் மொட்டை மாடியில் தாயே கிடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை சூடு தாங்க முடியாமல், கத்தி கூச்சல் போட்டு கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கண்டன குரல்களும் எழுந்து வருகின்றன.