சூடானில் சிறைத்தண்டனை பெற்ற மாடு

742
Advertisement

தெற்கு சூடானில் வயல்வெளியில் உழுது கொண்டிருந்த மாடு அங்கிருந்த சிறுவனை குத்தியதில், அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். சிறுவனை கொலை செய்த குற்றத்துக்காக மாடு கைது செய்யப்பட்டதை, சம்பந்தப்பட்ட இடத்திற்கு பொறுப்பான மேஜர் எலியா உறுதி செய்துள்ளார்.

சூடானில், ஆடு ஒரு பெண்மணியை கொன்று சிறைக்கு சென்று ஒரு மாதத்திற்குள்ளாக, மாடும் அதே போல் கைதாகியுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் நடக்கும்போது, குற்றம் செய்த விலங்கை தண்டனை காலம் முடிந்த பிறகு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு இழப்பீடாக வழங்கப்படுவது சூடானில் வழக்கமாக பின்பற்றப்படுகிறது.