இனிப்பு சாப்பிட 60 லட்சம் சம்பளமா?

119
Advertisement

‘கரும்பு தின்ன கூலி வேண்டுமா’ என்பது பழமொழி. ஆனால், கனடாவில் உள்ள Candy Funhouse என்ற candy  நிறுவனம் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பை பார்த்தால் உண்மையில் இது சாத்தியப்பட்டுள்ளதை காணலாம். இந்த வேலையில் சேர்வதற்கு 5 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

அதற்கு மேல், candy சாப்பிடும் ஆர்வம் மற்றும் உற்சாகமான அணுகுமுறை இருந்தால் போதும், மாதம் முழுக்க 3500க்கும் மேற்பட்ட candy வகைகளை சுவைத்து பார்த்து ஒரு வருடத்தில் 60 லட்சம் வரை சம்பாதித்து விடலாம். ஆகஸ்ட் 31க்குள் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தீவிர பயிற்சி அளித்து பிறகு தகுதியான நபரை தேர்வு செய்ய உள்ளதாக candy நிறுவனம் தெரிவித்துள்ளது.