பாகுபாடு காட்டும் பாஜக…மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு !

314
Advertisement

மக்களவையில் ரயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் கனிமொழி, லாபத்தில் இயங்கும் ரயில்களை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்ப்பதாகவும், நஷ்டத்தில் இயங்கும் ரயில்களை மட்டும் மத்திய அரசு இயக்கி வருவதாகவும் விமர்சித்தார். ரயில்வேதுறையில் தென்னியந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு புறக்கணிக்கப்படுவதாகக் கூறிய அவர், மொழி தெரியாத பணியாளர்களால் மக்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பட்ஜெட்டில் வடக்கு ரயில்வேக்கு 13,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், தெற்கு ரயில்வேக்கு 59 கோடி ரூபாய் மட்டும் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக கவலை தெரிவித்தார்.

மாநிலங்களவையில் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் விவகாரம் குறித்து பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, தமிழக மாணவர்களை மீட்க உதவியதற்காக பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.