முதல் முறையாக ஆளுங்கட்சியில் ஒரு இஸ்லாமிய எம்.பி. கூட இல்லாத நிலையை பா.ஜ.க உருவாக்கியுள்ளது

405

மத்திய அமைச்சர் பதவியை முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ள நிலையில், அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலமும் இன்றுடன் நிறைவடைகிறது.இதன்மூலம் பாஜக-வில் உள்ள 3 இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை முடிவுக்கு வந்துள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 57 இடங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பிலும் பா.ஜ.க சார்பில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லாத நிலையில், இஸ்லாமியர்கள் இல்லாத எம்.பி-க்கள் கொண்ட கட்சியாக பா.ஜ.க மாறியுள்ளது.

பாஜக அமைச்சரவையில் உள்ள மத்திய அமைச்சர்கள் எம்.ஜே.அக்பர் மற்றும் சையத் ஜாபர் இஸ்லாம் ஆகியோரின் பதவிக்காலம் ஏற்கெனவே முடிவடைந்துள்ளது.

பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வரும் நிலையில், பா.ஜ.க-வில் மொத்தம் உள்ள 395 எம்.பி-க்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை என்ற நிலையை பா.ஜ.க உருவாக்கியுள்ளது.