iPhone மற்றும் macbookகளில் உள்ள தொழில்நுட்ப குறைபாடு காரணமாக hackerகள் எளிதில் ஊடுருவ முடியும் எனவும், பயனர்கள் உடனடியாக பாதுகாப்பு தொடர்பான அப்டேட்களை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என எச்சரித்துள்ளது Apple நிறுவனம்.
பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் இருந்த இந்த ஓட்டையின் வழியாகவே இதுவரை hackerகளால் iPhoneஐ hack செய்ய முடிந்தது என கூறும் Apple நிறுவனம், இந்த பிரச்சினையை சரிசெய்ய பயனர்கள் புதிதாக program செய்யப்பட்டுள்ள Patchகளை பயன்படுத்தினாலே போதும் என தெரிவித்துள்ளது.