அக்னிபாத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவத்தில் 10% இட ஒதுக்கீடு

245

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க ‘அக்னிபாத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த 14ம் தேதி அறிவித்தது.

இந்த திட்டத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பி வருகின்றன.

இந்நிலையில் அக்னிபாத் திட்டம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “அக்னிபாத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவ படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அக்னிவீரர்களின் முதல் பிரிவுக்கு, நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும்” என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.