80 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் உலகப் போரின் போது ஆயிரம் பேருடன் கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நடந்த போது ஜப்பான் நாட்டை சேர்ந்த கப்பல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டு கடலில் பயணம் மேற்கொண்டது. அப்போது அதனை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் குண்டு வீசி தாக்கி அழித்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா பாதுகாப்பு துறை கடல் துறை தொல்லியலாளர்கள் மற்றும் ஆய்வு நிறுவனம் இணைந்து கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டது. பிலிப்பைன்ஸை ஒட்டிய கடல் பகுதியில் அந்த கப்பல் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. 80 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.