அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து – 4 பேர்  பலி

300

பாகல்கோட்டை மாவட்டம் அருகேயுள்ள உப்பள்ளியில் இருந்து சோலாப்பூர் செல்லும்தேசிய நெடுஞ்சாலையில் மினி லாரி பஞ்சர் ஆகி நின்றதால், அதற்கு மாற்று டயர் பொருத்திக்கொண்டிருந்தனர்.

இதனை ராஜகாசாப், சம்பகி, மல்லப்பா உள்ளிட்ட 4 பேர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது, அந்த வழியாக சென்ற வாகனம், அவர்கள் 4 பேர் மீதும் மோதிவிட்டுசென்றது.

இதில் 4பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து, பீலகி போலீசார் விசாரணை நடத்தினர்.