நிறுத்தி வைக்கப்பட்ட மினி வேன் மீது லாரி மோதி விபத்து

434

ஆந்திர பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் ரென்டசிந்தலா கிராமத்தில், ஸ்ரீசைலத்தில் இருந்து வந்த மினிவேன் ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

அதில் 39 பயணிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில்,  அந்த வழியே வந்த லாரி ஒன்று, நின்றிருந்த மினிவேன் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இதில், மினிவேன் புரண்டு தலைகுப்புற கவிழ்ந்தது.

வேனில் இருந்த பயணிகள் பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

10 பேர் காயம் அடைந்தனர்.காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.