சக்கரை நோயை சத்தம் இல்லாமல் சரி செய்யும் நாவல் கொட்டை! இப்படி சாப்பிடுங்க போதும்.

191
Advertisement

மாம்பழம், தர்பூசணி போலவே கோடைகாலங்களில் நாவல் பழங்களும் பரவலாக கிடைக்கத்  தொடங்கும்.

மக்களை அதிகமாக பாதிக்கும் சக்கரை மற்றும் இரத்த அழுத்த பிரச்சினை இரண்டிற்குமே நாவல் பழக் கொட்டைகள் சிறந்த மருந்தாக அமைகிறது. இரண்டு மூன்று நாட்களுக்கு உலர வைக்கப்பட்ட நாவல் கொட்டைகளில் உள்ள மேல்தோல் எளிதாக வந்துவிடும்.

பொடியாக அரைத்து வைத்து தினமும் ஒரு ஸ்பூன் அளவிற்கு தண்ணீரிலோ அல்லது கொழுப்பு குறைவான பாலிலோ சேர்த்து குடிப்பதால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. இந்த கொட்டைகளில் இருக்கும் ஜம்போலைன் மற்றும் ஜம்போஸின் ஆகிய உட்பொருட்கள் இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து இரத்த சக்கரை அளவுகள் உயராமல் வைக்க உதவுகிறது.

உடலில் உள்ள நச்சு நீரை சிறுநீர் மற்றும் வியர்வை வழியே இயற்கையாக வெளியேற்றுகிறது. நாவல் கொட்டைகளில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் கல்லீரல் வீக்கத்தை தடுத்து, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நாவல் கொட்டைகளில் உள்ள எலாஜிக் அமிலம் கட்டுப்படுத்த முடியாமல் உயரும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

தோல் சுருக்கம் போன்ற வயது மூப்பு அறிகுறிகளை ஏற்படுத்தக் காரணமாக அமையும் free radicalsஇன் தாக்கத்தை குறைப்பதால், மருத்துவர் ஆலோசனையுடன் சக்கரை நோயாளிகள் இந்த பொடியை எடுத்துக் கொள்வது மேம்பட்ட ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும்.