இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்ற உலக சுகாதார அமைப்பின் புகாரை ஆராய மத்திய அரசு 4 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமனம் செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் சோனிபட்டை சேர்ந்த மருந்து நிறுவனம் ஒன்று தயாரித்த இருமல் மருந்து காம்பியாவிற்கு அனுப்பப்பட்டிருந்தது.
இந்த மருந்தை உட்கொண்ட 66 குழந்தைகள் உயிரிழந்ததாக எழுந்த புகாரை அடுத்து அந்நிறுவனத்தின் இருமல் மருந்துகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.