‘இந்த அவமானம் தேவையா?’ பாகிஸ்தானை கிழித்தெறிந்த ‘இந்தியா’!

“பாகிஸ்தானில் நடக்கும் தீவிரவாதத்திற்கு இந்தியா எப்போது நிதி கொடுப்பதை நிறுத்தும்?” என்று திமிராகக் கேள்வி கேட்ட பாகிஸ்தான் நிருபருக்கு.. “ஒரு பயங்கரவாத நாடா என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறது?” என நெத்தியடி பதில் கொடுத்து மூக்குடைத்துள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்று வரும் எண்பத்தி ஒன்றாவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மாபெரும் வார்த்தைப் போர் வெடித்துள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பாகிஸ்தான் நிருபர் கேட்ட குற்றச்சாட்டிற்கு ஜெய்சங்கர் அளித்த காட்டமான பதிலடி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

அமைச்சர் பதில் அளித்தவுடன் அறையை விட்டு வெளியேறிய பிறகும், அந்தப் பாகிஸ்தான் பத்திரிகையாளர் தொடர்ந்து அங்கேயே கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.

பாகிஸ்தான் பத்திரிகையாளர் இப்படியொரு திமிரான கேள்வியைக் கேட்கக் காரணம், சமீபத்தில் இந்தியா எடுத்த ஒரு அதிரடி நடவடிக்கைதான். கடந்த 2025,ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரில் உள்ள சுற்றுலாத் தளத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பழிவாங்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள சுமார் ஒன்பது முக்கிய பயங்கரவாத முகாம்களின் மீது இந்தியா அதிரடியாக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி சின்னாபின்னமாக்கியது.

இந்தியா நடத்திய இந்த அதிரடித் தாக்குதலின் விரக்தியில்தான், தங்களின் இயலாமையை மறைக்கப் பாகிஸ்தான் தற்போது ஐ.நா சபையில் இப்படி நாடகமாடி வருகிறது.

பத்திரிகையாளர் சந்திப்பில் மட்டுமல்ல, ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் இந்தியா பாகிஸ்தானை வெளுத்து வாங்கியுள்ளது. இந்தியத் தூதர் க்ஷிதிஜ் தியாகி(Kshitij Tyagi) பேசுகையில், “பாகிஸ்தான் முதலில் மற்ற நாடுகளின் நிலத்தை ஆக்கிரமிப்பதையும், பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதையும் நிறுத்திவிட்டு, தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை எப்படி உயர்த்துவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஐ.நா சபையில் வந்து நாடகமாடுவதால், அவர்கள் வாங்கியுள்ள கடன்களை அடைக்க முடியாது” என்று மிகக் கடுமையாக விமர்சித்தார்.

மேலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களைப் பாகிஸ்தான் ராணுவம் கொன்று குவித்ததையும், மாணவர்களைக் கைது செய்ததையும் சுட்டிக்காட்டி உலக நாடுகள் மத்தியில் அவர் அம்பலப்படுத்தினார்.

இந்த அடுக்கடுக்கான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் பாகிஸ்தான் பிரதிநிதிகள் சபையில் திக்குமுக்காடிப் போயினர்.

இந்தியாவின் இந்த அதிரடியான நகர்வுகள், சர்வதேச அரங்கில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்திரையை முற்றிலுமாகக் கிழித்தெறிந்து, அவர்களுக்கு ஒரு மாபெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News