தேர்தல் பரப்புரையின் போது மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சியின் வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன் இன்று காலை முதலே பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து, கடும் வெயில் காரணமாக அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கட்சி நிர்வாகிகள், உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். கடும் வெயிலால் அதிமுக வேட்பாளர் மயங்கி விழுந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related News

Latest News