அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு இருந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியின் பிரசார வேனில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். வேனில் பரிசு பொருட்கள், பணம் எதுவும் உள்ளதா? என்று ஆய்வு மேற்கொண்டனர்.
சில நிமிடங்கள் நீடித்த இந்த தீவிர சோதனையில் பணம், பரிசு பொருட்கள் எதுவுமே சிக்கவில்லை. மேலும் வாகனத்தின் முன் கட்டியிருந்த கட்சி கொடிக்கும் முறையான அனுமதி பெறப்பட்டிருந்தது.சோதனைக்கு பிறகு அதிகாரிகள் வாகனத்தை தொடர்ந்து செல்ல அனும தித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
