16.07.2026; மீண்டும் தங்கம் விலை சரிவு… இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் உலகளாவிய போர் பதற்றம் காரணமாக தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,200 ஆகவும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,150 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து, சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.1,05,440 ஆகவும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,180 ஆகவும் விற்பனையானது.

இந்நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,05,200 ஆகவும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,150 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளையில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News