தமிழகத்தில் 10ம் வகுப்பு போதும்… ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை!!

தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மாவட்ட வாரியாக கிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 8ம் வகுப்பு வரை தமிழ் மொழியைப் படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.15,900 முதல் ரூ.58,500 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ரூ.100. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 35 வயது வரையும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 37 வயது வரையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 40 வயது வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கூடுதல் வயதுச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்கும் முறை: 04.12.2026 முதல் 18.12.2026 வரை https://tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

நேர்காணலுக்கான அழைப்பு ஜனவரி 5, 2027 அன்று அனுப்பப்படும். ஜனவரி 19 முதல் 21 வரை நேர்காணல் நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜனவரி 25ஆம் தேதியும், பணி நியமன ஆணைகள் ஜனவரி 27ஆம் தேதியும் வெளியிடப்படும்.

விண்ணப்பதாரர்கள் கல்வி, சாதி மற்றும் முன்னுரிமைச் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது அவசியம்.

Related News

Latest News