தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும். பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் டாஸ்மாக் கடைகளை 4 நாட்களுக்கு மூட உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களிலும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது. மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ஆம் தேதியும் மதுபானக் கடைகள் மூடப்படும்.
இந்த உத்தரவு இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில் வெளியிடப்பட்டுள்ளது. அதேசமயம், மதுபானங்களை சட்டவிரோதமாக சேமித்து வைக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், டாஸ்மாக் கடைகள் மட்டுமல்லாமல், உரிமம் பெற்ற பார்கள் மற்றும் பார்களுடன் இணைந்த கடைகளும் ஏப்ரல் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை, அதேபோல் மே 4ஆம் தேதியும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
