புதிய உரிமையாளருக்கு விற்கப்பட்ட கோல்டன் ரெட்ரீவர் நாய் ஒன்று,
அதன் பழைய உரிமையாளரைத் தேடி 40 மைல்கள், அதாவது 64 கீலோ மீட்டருக்கு நடந்தே சென்றுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கு அந்த நாய் நடந்தே உரிமையாளரின் வீட்டிற்குச் சென்றுள்ளது. அயர்லாந்தில் கூப்பர் என்ற நாய், தனது பழைய உரிமையாளரை விட்டு புதிய வீட்டிற்கு வந்த உடனேயே காரில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டது.
இதனால் அந்நாட்டில் காணாமல் போன செல்லப் பிராணிகளை மீட்டுக் கொடுக்கும் தொண்டு நிறுவனமான லாஸ்ட் பாவ்ஸ் , தனது சமூக வலைத்தளத்தில் இச்சம்பவம் குறித்து பதிவிட்டுள்ளது. கூப்பர் மனிதர்களின் உதவியின்றி தனியாகப் போக்குவரத்து நிறைந்த பிரதான சாலைகளிலும்,
இரவு நேரத்தில் அதிகம் பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் உணவு, தங்குமிடம் எதுவும் இல்லாமல், தனது மோப்ப சக்தியை மட்டும் உறுதியாக நம்பி பயணித்துள்ளது என்று அந்த தொண்டு நிறுவனம் கூறியுள்ளது. எங்களுக்கு ஏப்ரல் 22 ஆம் தேதி நாய் காணாமல் போனதாகத் தகவல் கிடைத்தது, இருப்பினும் நாய் எங்களிடம் சிக்காமல் தனது பழைய வீட்டிற்கே சென்றுவிட்டது.
சில தவிர்க்கமுடியாத காரணத்தால் பழைய உரிமையாளரைப் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் கூப்பர் தற்போது பத்திரமாக இருப்பதாக, தனது புதிய உரிமையாளரின் வீட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது, மேலும் மெல்ல மெல்ல புதிய இடத்தில் செட்டிலாகி வருகிறது என்றும் லாஸ்ட் பாவ்ஸ் அமைப்பினர் கூறுகின்றனர்.