உயர்சாதின்னா கேட்டதெல்லாம் கிடைக்குமா ?சுகாதாரத்துறை அமைச்சரே !! வீட்டிற்கு முன் போர்டு மாட்டி என்ன பிரயோஜனம்?

1371

சென்னை அயனாவரம் ESI மருத்துவமனையில் பொறுப்பு கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த Dr.வெங்கட மது பிரசாத் அரசு விதிமுறைகளை மீறி,அதிமுக ஆட்சிக்காலத்தில்  அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்.

Dr.வெங்கட மது பிரசாத்

மருத்துவமனையில் பணியாற்றிவந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் சாதிய பாகுபாடு பார்த்து,பலரை சாதிப்பெயரை சொல்லி இழிவுபடுத்தியதால் Dr.வெங்கட மது பிரசாத் மீது தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் உள்ளிட்ட பல அமைப்புக்களிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான ESI கட்டிடத்தை தன்னுடைய சொந்த தேவைக்காக Dr.வெங்கட மது பிரசாத் சட்டவிரோதமாக பயன்படுத்திய காரணத்தால் தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழகம் 81 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென்றும் அயனாவரம் ESI (DMS) மருத்துவமனைக்குக்கு கடிதமும் அனுப்பியுள்ளது

பட்டியலினத்தவர் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட புகார்

யாராலும் அசைக்கமுடியாத நபராக வலம் வந்த வெங்கட மதுபிரசாத் மீது எக்கச்சக்கமான புகார்கள் கொடுக்கப்பட்டதால்,2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தபோது அந்த புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியிருந்தார்.

ஆனாலும்,எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால்

இந்த விவகாரத்தை கையிலெடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடந்த ஏப்ரல் மாதம்  போராட்டமெல்லாம் நடத்தினர். தொடர்ச்சியான புகார்கள் காரணமாக ஒருவழியாக,கடந்த 07-06-22 ம் தேதியன்று அயனாவரம் மருத்துவமனையில் பணியாற்றிவந்த Dr.வெங்கட மது பிரசாத் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார்.

07-06-22 ம் தேதியன்று திருத்தணிக்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட உத்தரவு

உடனடியாக திருத்தணி மருத்துவமனையில் இணையவேண்டுமென்றும் அவருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ஆனால், 2022 ஜூன் மாதம் 7-ம் தேதி செவ்வாய் கிழமையன்று,இடமாற்ற உத்தரவை வாங்கிய அயனாவரம் மருத்துவமனையில் இருந்து ரிலீவ் ஆகி 10-ம் தேதி வெள்ளிக்கிழமை திருத்தணி அரசு மருத்துவமனையில் பணியில் இணைகிறார்.

நன்றாக கவனிக்கவும், அன்று ஒரே தினம் (வெள்ளிக்கிழமை) மட்டுமே திருத்தணியில் பணியாற்றுகிறார்.

அடுத்த இரண்டு தினங்கள் சனி ஞாயிறு விடுமுறை தினங்கள்..

ஆச்சர்யம் என்னவென்றால்,

13-06-22 ம் தேதியன்று Dr.வெங்கட மது பிரசாத் சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார்

13-06-22 அன்று திருத்தணியில் இருந்து விடுவிக்கப்பட்டு எழும்பூர் போலீஸ் மருத்துவனைக்கு மாற்றப்பட்ட உத்தரவு

அதாவது,

சாதிப்பாகுபாடு புகார்,சட்டவிரோத செயல்பாடுகள் என எக்கச்சக்கமான புகார்களுக்கு ஆளான நபர்,சென்னையில் இருந்து வேறு மாவட்டத்திற்கு  இடமாற்றம் செய்யப்பட்ட அடுத்த 5 தினங்களில் மீண்டும் சென்னைக்கே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சுகாதாரத்துறையில் இடமாறுதல் கோரி, ஆண்டுக்கணக்காக விண்ணப்பம் மேல் விண்ணப்பம் கொடுத்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் செவிலியர்களும் உள்ளனர்.

ஆனால்,Dr.வெங்கட மது பிரசாத் 5 தினங்களில் இடமாறுதல் பெற்றிருக்கிறார்.

எங்களுடைய துறையில் இது சாத்தியமே இல்லை சார் என அங்கலாய்க்கிறார்கள் அரசு மருத்துவர்கள்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தன்னுடைய வீட்டின் கதவின் முன்பு இடமாறுதல் சிபாரிசுக்காக யாரும் வராதீர்கள் என்று போர்டு ஒன்றை மாட்டிவைத்துளார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் கலந்தாய்வு மூலமாக மட்டுமே இடமாறுதல் பெறமுடியும் என நம்பிக்கொண்டிருந்தோம்.

ஆனால் இப்போது தான் தெரிகிறது ட்ரான்ஸபர் வாங்கணும் என்றால் கூட உயர்சாதியாக இருந்தால் உடனடியாக கிடைக்கும் போல என மருத்துவர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

திருவள்ளூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டவர் 5 தினங்களில் மீண்டும் சென்னை இடமாற்றம் செய்யப்பட்டது எப்படி என அறிய

சுகாதாரத்துறை அமைச்சரை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம்..

எல்லாவற்றையும் முழுமையாக கேட்டவர்.உடனடியாக அதுகுறித்து என்னவென்று விசாரிக்கறேன் என முடித்துக்கொண்டார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்

உங்கள் வீட்டின் கதவில் நீங்கள் மாட்டி வைத்திருக்கும் போர்டை தயவு செய்து எடுத்துவிடுங்கள்.தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களே..

ஏனெனில்..அந்த வார்த்தைகள் உண்மையல்ல