யாரெல்லாம் இரத்த தானம் செய்யலாம்?

320
Advertisement

இரத்த தானம் செய்வதால் பல உயிர்களை காப்பாற்ற முடியும். ஆனால், இரத்த தானம் செய்பவருக்கும் உடல் மற்றும் மன ஆரோக்கியம் அதிகரிக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இரத்த தானம் செய்பவரின் உடல் தகுதி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இரத்த தானம் செய்பவர்  குறைந்தபட்சம் 18 வயதை பூர்த்தி செய்திருப்பதும் 65 வயதுக்கு மிகாமலும் இருப்பது அவசியம்.

இரத்த தானம் செய்பவரின் உடல் எடை குறைந்த பட்சமாக 55 கிலோ வரை இருக்க வேண்டும்.

இரத்த தானம் செய்த ஆண்கள் 90 நாட்கள் இடைவெளியும், பெண்கள் 120 நாட்கள் இடைவெளியும் விட்டு, பிறகு மீண்டும் இரத்த தானம் செய்யலாம்.

இரத்த தானம் செய்யும் முன் நாடித் துடிப்பு 60இல் இருந்து 100 வரையும், ஹீமோகுளோபினின் அளவு 12.5 அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும்.

Night shift வேலைக்கு சென்றுவிட்டு சரியான தூக்கம் இல்லாதவர்கள் இரத்த தானம் செய்ய கூடாது.

அதே போல், சாப்பிடாமல் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

முக்கியமாக, இரத்த தானம் செய்பவர் மது அருந்தி இருக்க கூடாது. இரத்தத்தின் மூலம் பரவும் நோய் இருப்பவர்களும், சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பவர்களும் இரத்த தானம் செய்ய கூடாது.

HIV பாசிட்டிவ் நபர்கள், இன்சுலின் எடுத்து கொள்ளும் நீரிழிவு நோயாளிகள் மற்றும் புற்றுநோய் நோயாளிகளும் இரத்த தானம் செய்ய கூடாது.

சரியான உடல் எடை மற்றும் பிற உடல் தகுதி பெற்றவர்கள் இரத்த தானம் செய்த ஒரு மணி நேரத்திற்கு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

24 மணி நேரத்திற்கு கடினமான வேலைகளை செய்யாமல், நீரிழப்பு ஏற்படாமல் இருக்க நிறைய தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.