நகரத்தை விட்டு  ஒதுக்கிவைக்கப்பட்ட  14 வயது சிறுவன்

329
Advertisement

மற்றவர்களிடம் வெளிப்படும் சிறுவர்களின் குறும்புத்தனம் ஒரு அளவிற்கு மேல் சென்றால் அது தொந்தரவாக மாறிவிடும்.இங்கு அப்படி  தான் சிறுவன் ஒருவன் ஊருக்கே தொந்தரவாக இருக்கிறான் என  ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துள்ளனர்.

இங்கிலாந்தில்,மேற்கு மெர்சியா காவல்துறையின் தகவல்படி, 14 வயதான சிறுவன்  மீது  சமூக விரோத, அச்சுறுத்தும் நடத்தை மற்றும் ஆன்லைன் துஷ்பிரயோகம் செய்ததாக அங்குள்ள  உள்ளூர் வணிகங்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடமிருந்து தொடர்ச்சியான புகார்கள் வந்ததையடுத்து சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரவின்படி, 14 வயதான அந்த  சிறுவன் , மே 2025 ஆண்டுவரை வரை ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பொது இடங்களில் மூன்று பேருக்கு மேல் குழுவாக இருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.சிறுவனுக்கு இத்தகைய உத்தரவுகள் அசாதாரணமானது என்றும் நீதிமன்றத்தின் தடையை மீறினால் கடுமையான அபராதத்தை சிறுவன் எதிர்கொள்ள நேரிடும்.

இந்த உத்தரவு எதிர்காலத்தில் அந்த சிறுவன்  இவ்வாறு செயல்படுவதைத் தடுக்கும் என நம்புவதாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.