ஆட்சியைப் பிடிப்பதற்காக எப்படியெல்லாம் அரசியல் கட்சிகள் முயற்சிசெய்கின்றன என்பதற்கு இந்த வீடியோவில் நாம் காணும் படம் ஒரு சிறந்த உதாரணமாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், 2022 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை முன்னிட்டுத் தன்னுடைய கட்சிப் பெயரில் சமாஜ்வாடி அத்தர் என்னும் வாசனைத் திரவியம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சட்டசபைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. ஆட்சியைப் பிடிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசினார். சமாஜ்வாடி கட்சியும் வாக்காளர்களைக் கவர்வதற்காகப் புதுமையான யுக்தியைக் கையாளத் தொடங்கியது.
அதன் ஒருபகுதியாக சமாஜ்வாடி அத்தர் என்னும் பெயரில் வாசனைத் திரவியம் ஒன்றை அக்கட்சி அறிமுகப்படுத்தியது. இந்தச் செயல் சாதாரண மனிதர்களை மட்டுமன்றி அனைத்து அரசியல் நோக்கர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
சமாஜ்வாடி அத்தர் தொடக்க விழாவில் பேசிய அக்கட்சியின் மேல்சபை உறுப்பினர் புஷ்பராஜ் ஜெயின் இந்த வாசனைத் திரவியம் 2022 ஆம் ஆண்டில் வெறுப்பை முடிவுக்குக் கொண்டுவரும் என்று கூறியிருந்தார்.
இந்த வாசனைத் திரவிய முயற்சி வேடிக்கையாகவும் விநோதமாகவும் அமைந்துள்ளது. என்றாலும், கட்சி வாசனைத் திரவியத்தை அகிலேஷ் அறிமுகப்படுத்துவது முதன்முறையல்ல. 2016 ஆம் ஆண்டில் தனது கட்சி உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியிலிருந்தபோது சமாஜ்வாடி சுகந்த் என்ற பெயரில் நான்காண்டு சாதனையைக் குறிப்பதற்காக நான்கு வாசனைத் திரவியங்களைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்டுவிட்டர் பக்கத்தில் சமாஜ்வாடி அத்தர் வாசனைத் திரவியத்துக்கான தொடக்க விழா புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. சமாஜ்வாடி கட்சியின் இந்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கவில்லை. எதிர்க்கட்சியாக வந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.