ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதில் முன்னேற்றம் -உக்ரைன் அதிபர்

428
Advertisement

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணையும் செயல்முறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 24வது நாளாக நீடிக்கும் நிலையில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டெர் லெயனிடம், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று பேசினார்.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, வரும் மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவது தொடர்பான செயல்முறையில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினருக்கான உக்ரைன் விண்ணப்பம் தொடர்பாக ஐரோப்பிய ஆணையத்தின் கருத்து சில மாதங்களுக்குள் தயாரிக்கப்படும் என்றார்.

இதுதொடர்பாக உக்ரைன் அரசு மற்றும் ஐரோப்பிய ஆணையத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தங்களின் இலக்கை அடைவதற்கான முயற்சியை இணைந்து முன்னெடுத்து செல்வோம் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.