“ஆட்டமே  இனி  தான் ” அடுத்த  தேர்தல் குறித்து மம்தா பானர்ஜி சூசகம்

373
Advertisement

சமீபத்தில் 5 மாநிலங்களில்  நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 4ல் பாஜக வெற்றி பெற்றாலும், வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதி கூட இல்லாததால் வெற்றி பெறுவது எளிதல்ல என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளர்.

“ஜனாதிபதி தேர்தல் இந்த முறை பாஜகவுக்கு அவ்வளவு சுலபமாக இருக்காது. நாட்டில் உள்ள மொத்த எம்.எல்.ஏ.க்களில் பாதி கூட அவர்களிடம் இல்லை. எதிர்க்கட்சிகள் சேர்ந்து நாடு முழுவதும் அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்,” என்று சட்டசபையில் அவர் கூறியுள்ளர்.

“ஆட்டம் இன்னும் முடியவில்லை. உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த சமாஜ்வாடி போன்ற கட்சிகளுக்கு கூட கடந்த முறை இருந்ததை விட அதிகமான எம்.எல்.ஏக்கள் தற்போது உள்ளனர்,”  5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் எதிர்க்கட்சிகள் பாஜக வெற்றியை பார்த்து சோர்ந்து போக வேண்டாம் எனவும் , காங்கிரஸ் விரும்பும் பட்சத்தில் 2024ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சியுடன் கூட்டணி வைக்கத் தயார் என மம்தா அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.