களையெடுப்பை தொடங்கிய காங்கிரஸ்…சோனியாவின் அதிரடி உத்தரவு !

288
Advertisement

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில் பஞ்சாப்பை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜக தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. அதே சமயத்தில், காங்கிரஸோ அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வி அடைந்தது. இதனால் நாடு முழுவதும் காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, இந்த தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் பெரிதும் வலுத்தன.


இதனிடையே, தேர்தல் தோல்வி குறித்து விவாதிப்பதற்காகவும், சுய ஆய்வு செய்வதற்காகவும் காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எனினும், இதில் முக்கிய முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை. காங்கிரஸ் தலைவராக சோனியாவே நீடிப்பார் என அந்தக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இந்நிலையில், தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை சோனியா காந்தி இன்று அதிரடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .