நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 31ல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உரையுடன் துவங்கியது. பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல் கட்ட அமர்வு பிப்ரவரி 11ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 8ம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக முதல் கட்ட கூட்டத் தொடரில், காலையில் மாநிலங்களவையும், மாலையில் மக்களவையும் செயல்பட்டன. தற்போது, கொரோனா பரவல் குறைந்துள்ளதால், இரு சபைகளும் வழக்கம் போல் காலை 11 மணிக்கு தொடங்குகின்றன.
பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட அமர்வில் எதிர்க்கட்சிகள் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ள விவகாரத்தை கையில் எடுத்து பிரச்சனை எழுப்பத் திட்டமிட்டுள்ளனர் .