சீனாவிடமிருந்து நான்காம் தலைமுறை J-10C ரக போர் விமானத்தை பாகிஸ்தான் வாங்கியுள்ளது.
சீனாவிடம் இருந்து வாங்கப்பட்ட இந்த விமானங்கள், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் விமானப்படைதளத்தில் தரையிறங்கியது.
அதைத்தொடர்ந்து இந்த விமானங்கள் பாகிஸ்தான் ராணுவத்தில் இணைக்கப்பட்டது.
இந்த விழாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டார்.
J-10C போர் விமானம் அனைத்து கால சூழ்நிலைகளிலும் செயல்படும் திறன் கொண்டது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இது, இந்தியா வாங்கியுள்ள ரபேல் ரக போர் விமானத்துக்கு ஈடு கொடுக்கும் என்று பாகிஸ்தான் ராணுவம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.