90 டிகிரி கூர்மையான வளைவுடன் வளரும் மரங்கள் 

225
Advertisement

க்ரூட்  ஃபாரஸ்ட் ( Crooked Forest ) என்பது போலந்தில் உள்ள க்ரிஃபினோ நகருக்கு அருகில் அமைந்துள்ள 400 வித்தியாசமான வடிவமைப்பின் மரங்களின் தோப்பாகும்,

அம்மரங்களின் மிக வித்தியாசமான அமைப்பால், இந்த இடத்திற்கு Crooked Forest என்று பெயர் வரக் காரணமாக இருந்தது, 

அடிவாரத்திலிருந்து பைன் மரங்கள் 90 டிகிரி கூர்மையான வளைவுடன் வளரும், பின்னர் வளைந்து நேராக வானத்தில் வளரும். 

இதற்குக் காரணம் ஒரு தனித்துவமான ஈர்ப்பு விசை என்று சிலர் அனுமானிக்கின்றனர், இதுவே இந்த குறிப்பிட்ட பகுதியில் மரங்கள் வடக்கு நோக்கி வளைந்து வளர காரணமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். 

மரங்கள் துளிர்க்கும் போது அப்பகுதியில் உள்ள கடுமையான பனிப்பொழிவு, மரங்கள் அடிவாரத்தில் வளைந்து வளர காரணமாக இருந்ததாக யூகிக்கிறார்கள்,

இயற்கைக்கு மாறான வளைவுகள் அவற்றின் அடிவாரத்தில் மூன்று முதல் ஒன்பது ஆடி வரை பக்கவாட்டில் வளைந்திருக்கும் , பொதுவாக ஆரோக்கியமாக வளரும் மரங்கள் 50 அடி உயரம்வரை வளரக்கூடியது. 

எதோ ஒரு இயற்கை மாற்றம் அல்லது பாதிப்பு காரணமாக, இம்மரங்கள் தானாகவே வளைந்து வளர்ந்திருப்பது, இன்று வரை புரியாத புதிராக இருந்துள்ளது.