5 மாநில தேர்தல் எதிரொலி : ஏறுமுகத்தில் பங்குச்சந்தை!

182
Advertisement

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் பங்குச் சந்தை இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 5.4 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. போலவே, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 16,700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

முன்னதாக, உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா தொடங்கிய போர் கச்சா எண்ணெய் மற்றும் பங்குச் சந்தையில் கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 7 வரை மிகவும் மோசமாக பாதித்தன. இதனால் பங்குச் சந்தைகள் வரலாறு காணத அளவில் கடும் வீழ்ச்சியடைந்தன. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு, பங்குச் சந்தைகள் சரிவிலிருந்து மீண்டு பங்குகளின் மதிப்பு உயரத் தொடங்கின.

இந்நிலையில், தற்போது ஐந்து மாநிலங்களின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் சில சுற்றின் முடிவில், பாஜக முன்னிலையில் வகித்து வருகிறது. இதனால் இன்றைய பங்குச் சந்தை உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது. நிதி, ஆட்டோமொபைல் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பங்குகள் மிகப் பெரிய அளவில் லாபத்துடன் வர்த்தகமாகியது.

Advertisement

30 நிறுவனங்களின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 1,595.1 புள்ளிகள் அல்லது 2.9 சதவீதம் அதிகரித்து 56,242.5 ஆகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி பெஞ்ச்மார்க் 411.8 புள்ளிகள் அல்லது 2.5 சதவீதம் அதிகரித்து 16,757.1 ஆகவும் வர்த்தகத்தை தொடங்கியது.