மிரள வைக்கும் புதிய வாட்ஸ் அப் தகவல்கள்

288
Advertisement

வாட்ஸ் அப் தனது புதிய அப்டேட்டை  ஒரு சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது அதாவது ஒரு வீடியோ காலில் கிட்டதட்ட 32 நபர்கள் இணைந்து பேசலாம் எனவும், அதிலும் குறிப்பாகச் சமீபத்தில் ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கையை 256ல் இருந்து 512 என்று அதிகரித்துள்ளது.

இந்த புதிய அப்டேட்கள் வாட்ஸ் அப் கால் Call மற்றும் மெசேஜ்களின் குவாலிட்டியை அதிகப்படுத்தும் வகையில் இருக்கிறது, எனவே மற்றொரு புதிய வசதியையும் வாட்ஸ் அப் கொண்டு வந்துள்ளது, இந்த வசதி வாட்ஸ் அப் Call-களை மேம்படுத்தும் வகையில் இருக்கிறது. இதன் மூலம் குரூப் காலில் அட்வான்ஸ் வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதாவது வாட்ஸ் அப் குரூப் காலில் பேசி கொண்டு இருக்கும் நேரத்தில், அந்த காலில் இருக்கும் குறிப்பிட்ட நபரை மியூட் (mute) செய்யவும் அல்லது பர்சனலாகவும் மெசேஜ் செய்ய முடியும், நாம் முயிட் செய்ய மறந்துவிட்டால், அல்லது குறிப்பிட்ட நபர்கள் , நீங்கள் பேசுவதைக்  கேட்ட வேண்டாம் என்று நினைத்தாலும், இந்த வசதி உதவியாக இருக்கும்.

அதிலும் சில நபர்கள் நமது ப்ரொபைல் போட்டோ, தங்களைப் பற்றிய தகவல் மற்றும் கடைசியாக வாட்ஸ் அப், பயன்படுத்திய நேரத்தையும் குறிப்பிட்ட நபர்கள் பார்க்க முடியாமல் நாம் செட் செய்திடமுடியும்.

இந்த புதிய தகவலைப் பற்றி வாட்ஸ் அப்பின் தலைமை அதிகாரி வில் கேட்கார்ட்  மற்றும் வாட்ஸ் அப்பின் வெரிஃபயிட் ட்விட்டர் பக்கங்களில் வெளியாகியுள்ளது.