கன மழை பெய்யப்போகும் அந்த 3 மாவட்டங்கள்…

436
Advertisement

திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக  திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருப்பத்தூர், நீலகிரி, கோவை, சேலம் மற்றும் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் , புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்  நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.

வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் பலத்த காற்று, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது