ஒரு கார் கூட விற்கவில்லை-சீனா நிறுவனங்கள் கவலை

271
Advertisement

கொரோனாவின் அலை மீண்டும் வீசத்தொடங்கியுள்ள நிலையில் , 25 மில்லியன் மக்கள் வசிக்கும் சீனாவின் மிகப்பெரிய பெருநகரப் பகுதி ஏழு வாரங்களாக கடுமையான கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.

மக்கள் வீட்டிலேயே இருக்கவும்,வணிகவளாகங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் திங்களன்று வெளியிடப்பட்ட ஷாங்காய் ஆட்டோமொபைல் விற்பனை வர்த்தக சங்கத்தின் அறிக்கையின்படி, கோவிட் கட்டுப்பாடுகள் நகரத்தின் கார் சந்தையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது – கிட்டத்தட்ட அனைத்து டீலர்களும் மூடப்பட்டனர், மேலும் எந்த விற்பனையும் பதிவு செய்யப்படவில்லை.

ஒட்டுமொத்தமாக, சீனாவின் கார் விற்பனை மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் மாதத்தில் 46% ஆக சரிந்து உள்ளது. இது ஒரு தசாப்தத்தில் ஏப்ரல் மாதத்தில் நடந்த மிக மோசமான விற்பனையாகும் என்று சீனாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் கடந்த வாரம் கூறியது.

சீனாவின்  ஷாங்காய் நகரம் வாகன விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஷாங்காய் நகரில் சுமார் 7,36,700 புதிய வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன, இது நாட்டின் முக்கிய காப்பீட்டுக் கட்டுப்பாட்டாளரின் புள்ளிவிவரங்களின்படி மற்ற நகரங்களை காட்டிலும் அதிகம்.

டெஸ்லா மற்றும் வோக்ஸ்வேகன்  போன்ற வாகன உற்பத்தியாளர்களுக்கும், முக்கிய உதிரிபாக சப்ளையர்களான Bosch மற்றும் ZF குழுமத்திற்கும் இது ஒரு முக்கிய உற்பத்தி மையமாகும்.ஊரடங்கால் டெஸ்லாவின் சீனா விற்பனை முந்தைய மாதத்தை விட ஏப்ரல் மாதத்தில் 98% சரிந்துள்ளது.

மேலும் ஷாங்காய் தொழிற்சாலையில் அதன் உற்பத்தியும் 81% சரிந்தது.ஜப்பானில் உள்ள எட்டு ஆலைகளில் 14 உற்பத்தி வரிகளின் செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாக டொயோட்டா கடந்த வாரம் கூறியது.

நிசான் மோட்டார் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட சீனாவின் விற்பனையில் 46% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.