2005ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று உலகில் அடியெடுத்து வைத்த Youtube, இன்று ஒரு தனி உலகமாகவே மாறி விட்டது.
காதலர் தினத்தன்று அறிமுகம் ஆனதாலோ என்னவோ, மக்களுக்கு Youtube மீதான காதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
Googleக்கு அடுத்தபடியாக அதிகம் முறை பார்க்கப்படும் இணையதளமாக Yotube உள்ளது.
மாதந்தோறும் Youtubeஇன் சராசரி பயனாளர்களான 2.5 பில்லியன் மக்கள் அனைவரும் பார்க்கும் வீடியோக்களின் நேரத்தை சேர்த்தால், கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு மட்டும் ஒரு பில்லியன் மணிநேர அளவு வீடியோக்கள் பார்க்கப்படுகிறது.
நம் வாழ்க்கையில் இப்படி பின்னி பிணைந்து போன Youtubeஇல் வெளியான முதல் வீடியோவை Youtube தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Yotubeஇன் இணை நிறுவனரான ஜாவெத் கரீம், சான் டியாகோ உயிரியல் பூங்காவில் சில யானைகளுக்கு முன் நின்று எடுத்த வீடியோ தான், Youtubeஇல் upload செய்யப்பட்ட முதல் வீடியோ. 17 வருடங்களுக்கு முன் பதிவேற்றப்பட்ட இந்த 19 seconds கொண்ட வீடியோ, இதுவரை 235miilion views பெற்றுள்ள நிலையில் தற்போது மீண்டும் trend ஆகி வருகிறது.
https://www.instagram.com/tv/Cen1tWaoQGd/?utm_source=ig_web_copy_link