தன் செல்லப்பிள்ளையாக வளர்த்து வந்த பூனை மீது அத்துமீறல் குற்றம்சாட்டி சிறையில் அடைக்கப்படத்திற்கு எதிராக பூனையின் உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் வெற்றிபெற்று இழப்பீடாக 95 லட்சம் பெற்றுள்ள சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு , டேனியலி என்ற பெண் வளர்த்து வந்த மிஸ்கா என்ற பூனை அத்துமீறி மற்றவர்கள் இடத்தில் நுழைந்து மற்ற விலங்குகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது என குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு புகாராக மாறி, மிஸ்கா என்ற பூனை சிறிது காலம் பூனைகளுக்கான சிறையிலும் அடைக்கப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த டேனியலி, பூனையின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.இதில் மூன்று ஆண்டுகளுக்கான அபராத தொகை மட்டும் ரூ. 23 லட்சம் அடங்கும்.இந்த தொகையை செலுத்த மறுத்துவிட்டார் டேனியலி.
இந்த வழக்கில் ஆஜரான டேனியலி தரப்பு வழக்கறிஞர் ,பெல்வியூ பகுதியை சேர்ந்த அப்பாவி பூனை மீது சுமத்தப்பட்ட அநியாமம் மிக்க குற்றச்சாட்டு இது.மேலும் இந்த விவகாரத்தில் அரசு அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் , விதிக்கப்பட்டுள்ள அபராத தொகை மிகவும் அதிகம் என வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களை பதிவுசெய்துகொண்ட நீதிமன்றம் கூறுகையில், மிஸ்கா என்ற பூனை அத்துமீறி எங்கும் நுழையவில்லை இந்த குற்றச்சாட்டு முழுக்க முழுக்க அர்த்தமற்றவை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
மூன்று ஆண்டுகள் கழித்து பூனை மீது போடப்பட்டது பொய் வழக்கு என நிரூபித்து 95 லட்சம் ரூபாயை இழப்பீடாக பெற்றார் பூனையின் உரிமையாளர் டேனியலி