ஒரு இட்லி ரூ .2.50,தோசை ரூ.5 !

271
Advertisement

பசியால் வாடும் சாமானிய மக்களுக்கு கையேந்தி பவன் கடைகள்தான் வயிறு நிரம்ப உணவளித்து வருகின்றன.

என்னதான் விலை குறைவு என்றாலும் ரூ.5க்கு குறைவாக ஒரு இட்லி, ரூ.20 குறைவாக ஒரு தோசை விற்பனை செய்வது சற்று சிரமம்தான்.

ஆனால், இதை விடவும் விலை மலிவாகவும், தரமாகவும் இட்லி, தோசையை விற்பனை செய்து வருகிறார் பெங்களூரை சேர்ந்த அம்மா.

கௌரவ் வாசன் என்ற ஃபுட் ப்ளாகர் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அதில், ஒரு வீட்டுக்கு முன்பாக சேர் மற்றும் டேபிள் சகிதமாக அமர்ந்திருக்கும் அம்மா, ஹாட் பாக்ஸில் இட்லி மற்றும் தோசை வைத்து விற்பனை செய்து வருகிறார்.

விலையை கேட்கும் எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில், மிகவும் மலிவாக இந்த அம்மா வியாபாரம் செய்து வருவது பாராட்டுக்குரிய விஷயமாக உள்ளது.

ஒரு இட்லி ரூ.2.50 என்ற விலையிலும், ஒரு தோசை ரூ.5 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான பணத்தை சம்பாதிக்க மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ளும் விளிம்புநிலை மக்களில் ஒருவராக உள்ள இந்த அம்மா, சிறு புன்னகையுடன் தனது வியாபாரத்தை தொடர்கிறார்.

வீட்டிற்கு மேல்தளத்தில் இட்லி மற்றும் தோசை தயார் செய்யப்பட்டு, அவை தூக்குவாளி மூலமாக கயிறு கட்டி அம்மாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மலிவாகவும், தரமாகவும் உணவு விற்பனையை செய்து வரும் இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொழிலில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தார்.

இந்த கடை பெங்களூர் மாநகரம், பசவனகுடி அருகே விஷ்வேஸ்வரபுரா பகுதியில் உள்ள பார்வதிபுரம் தெருவில் அமைந்திருப்பதாக பதிவர் குறிப்பிட்டுள்ளார்.

காலை 6 மணிக்கெல்லாம் சுடச்சுட இட்லி விற்பனை தொடங்கி விடுகிறது.

நண்பகல் 12.30 மணி வரையிலும் கடை செயல்படுகிறது.