“தாத்தா மரம்” தாத்தா நினைவாக மரம் வளர்க்கும் பேரக்குழந்தைகள் 

368
Advertisement

தாத்தா பாட்டி என்றாலே ஒரு விதமான மகிழ்ச்சியை தரும் நமக்கு.பெற்றோர்களுக்கோ தைரியம் மற்றும் பெலனை தரும்.ஏனெனில் அவர்கள் தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளை மிகவும் நேசிக்கிறார்கள்.

எப்போடா விடுமுறை வரும் தாத்தா பாட்டி வீட்டிற்கு போகலாம் என்று ஏங்காத குழந்தைகள் இல்லை.சிலருக்கு அதற்கான அவசியமே இல்லை.இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில் , பெண்  ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுக்காக அவரின்  தந்தையின் நினைவகத்தை எவ்வாறு உயிரோடு வைத்திருந்தார் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்துகிறது.

கெல்லி கிளாஸ்ஃபோர்ட்  என்ற  பெண் பகிர்ந்த வீடியோவில், அவரின்  மூத்த மகன் பிறந்த வருடமே அந்தப் பெண்ணின் தந்தை இறந்து விட்டார்.தந்தையுடன் வாழ்ந்த வசந்த காலத்தை நினைவூட்ட அவரது நினைவாக வீட்டிற்கு வெளியே ஒரு மரத்தை நட்டனர்.

அவரின் குழந்தைகள் தங்கள்  ஒவ்வொரு  பிறந்தநாளில் மரத்துடன் படம் எடுத்துக்கொள்கிறார்கள்.இதன் மூலம் தன் தந்தை அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது போல் உணர்வதாக கூறுகிறார் கெல்லி.

அவரின் குழந்தைகள் அந்த மரத்தை ‘தாத்தா மரம்’ என்று அழைக்கிறார்கள்.இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவிற்கு பலரும் தங்கள் பெற்றோர்கள் உடனான நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.